தென்னிந்திய சினிமாவில் முன்னணி பிரபலங்களாக வலம் வரும் பலரும் தொடர்ந்து பல இன்னல்கள் காரணமாக தொடர்ந்து காலமாகி வரும் நிலையில் சமீபத்தில் மேலும் ஒரு முன்னணி திரை பிரபலம் காலமாகியுள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி மேலும் ரசிகர்கள் மற்றும் திரையுலக வாசிகளை தீராத சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. இப்படி ஒரு நிலையில் ஆந்திராவை பூர்விகமாக கொண்டு

திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி பல வெற்றிபடங்களை இயக்கி சினிமா உலகில் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் பிரபல முன்னணி இயக்குனர் கே. விஸ்வநாத். இவர் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார். அந்த

வகையில் தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படங்களான யாரடி நீ மோகினி, ராஜபாட்டை, உத்தமவில்லன், லிங்கா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக படங்களை இயக்கியும் நடித்தும் வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்

உடல்நலகுறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 92 வயதாகும் நிலையில் வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில் இவரது இழப்பு ஒட்டு மொத்த திரையுலகினரையும் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில்   இந்த தகவல்கள் இணையத்தில்  வெளியானதை அடுத்து பல முன்னணி சினிமா பிரபலங்களும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்……..