தற்போது சினிமாவில் பொறுத்தவரை பலரும் புதுமுகங்களாக சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் நிலையிலும் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது பிரபலத்தை தாண்டி நடிப்பு திறமையின் மூலமாக மக்கள் மற்றும் திரையுலகில் தங்களுக்கென தனி ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர் . இப்படி இருக்கையில் துவக்கத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலமாக தனது திரைபயணத்தை தொடங்கிய நிலையில் இன்றைக்கு தென்னிந்திய சினிமாவில் ஹீரோ, வில்லன் என

பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென தனி பெரும் கூட்டத்தையே ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் டிஎஸ்பி திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் அடுத்ததாக பாலிவுட்டில் வில்லனாக நடித்து வருவதாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இவ்வாறு

இருக்கையில் பிரபலமாக இருக்கும் விஜய் சேதுபதி அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளார்கள். இதையடுத்து தனது மகன் மற்றும் மகள் இருவருடனும் படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ள நிலையில் சமீபத்தில் தனது ரசிகர் ஒருவரின் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார் .

இதனைதொடர்ந்து அந்த திருமணம் முதல் சுயமரியாதை திருமணமாக இருந்த நிலையில் இதில் விஜய் சேதுபதி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடும்பமாக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த திருமணத்தில் எடுத்த பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அதில் அவரது மனைவியை பார்த்த பலரும் என்னது இவங்க தான் இவரோட மனைவியா என வியந்து போயுள்ளனர்………