பிரபல முன்னணி தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பெரிதளவில் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் கடந்த சில வருடங்களாக ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடர் நான்கு அண்ணன் தம்பிகளுக்கு இடையே நடக்கும் பாசபோராட்டத்தை மையமாக வைத்து வெளியாகி வரும் நிலையில் இதற்கு

இல்லத்தரசிகளை கடந்து இளைஞர்கள் பலரும் இந்த தொடருக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர் .காரணம் இதில் வரும் கதிர் முல்லை கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் ரோமன்ஸ் காட்சிகள் திரையுலகில் படங்களில் வருவதையே மிஞ்சி விடும் எனலாம் இப்படி ஒரு நிலையில் பல இன்னல்களுக்கு பிறகு தற்போது முல்லை கர்ப்பமாக உள்ளார் . இதனைதொடர்ந்து சீரியல் தற்போது விறுவிறுப்பாக

ஒளிபரப்பாகி வரும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சத்தமில்லாமல் திருமணத்தை முடித்துள்ள தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த தொடரில் பிரசாந்த் எனும் கேரக்டரில் நடித்து வருபவர் மகேஷ் இதையடுத்து இந்த தொடரில் மீனாவின் தங்கையாக நடிக்கும் ஸ்வேதாவுக்கும் நிச்சயம் முடிந்த நிலையில் அடுத்து அவர்களுக்கு திருமணம் நடக்கும் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில்

மகேஷ் சீரியலை தொடர்ந்து நிஜத்திலும் திருமணம் செய்து கொண்டுள்ளார் இந்நிலையில் நேற்றைய நாளில் மகேஷ் சென்னையில் உள்ள ஈவிஎஸ் மகாலில் பிரேமலதா என்பவரை  சிம்பிளான முறையில்  தனது திருமணத்தை முடித்துள்ளார். இப்படி இருக்கையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……..