திரையுலகில் என்னதான் படங்கள் மற்றும் தொடர்களில் நடித்து வந்தாலும் ஒரு சில நடிகர் நடிகைகள் அவ்வளவாக மக்கள் மத்தியில் பிரபலமாகாத நிலையில் போதிய வரவேற்பும் இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பலரும் தங்களை மக்களிடையே பிரபலபடுத்தி கொள்ளும் வகையில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு வெகுவாக தங்களை பிரபலபடுத்தி கொள்வதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி படங்களில்

உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். அந்த வகையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பல விமர்சனங்களுக்கு ஆளானவர் பிரபல முன்னணி சீரியல் நடிகை ஆயிஷா. இவர் விஜய் டிவியில் வெளியாகி வரும் சத்யா சீரியலில் கதையின் நாயகியாக நடித்து வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தன்னை பிரபலபடுத்தி கொள்ள நினைத்த நிலையில் அது வெறும் கனவாகவே போனது

எனலாம். இது ஒரு பக்கம் இருக்க இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே இவரது முன்னாள் காதலர் குறித்த தகவல்கள் மற்றும் பேட்டி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி இருக்கையில் ஆயிஷா தற்போது வேறு நபரை காதலித்து வரும் நிலையில் அவர் குறித்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது . அந்த வகையில் காதலர்

தினத்தின் ப்ரொபோஸ் தினமான இன்று தனது காதலரை ப்ரொபோஸ் செய்யும் படியான புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மேலும் அதில் அட இன்னைக்கு ப்ரொபோஸ் தினமாமே என பெண்களுக்கே உரிய வெட்கத்துடன் பதிவிட்டுள்ளார். இதனைதொடர்ந்து இந்த பதிவு இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது…….