தற்போது சினிமாவில் பல இளம் நடிகைகளும் தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் நிலையிலும் அவர்களுக்கு சவால் விடும் வகையில் கடந்த சில வருடங்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி அவர்களுக்கு இணையாக கோடிகளில் சம்பளம் வாங்கியவர் பிரபல முன்னணி நடிகை சமந்தா. இவ்வாறு பிசியாக பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் கடந்த சில

மாதங்களுக்கு முன்னர் தனது இணைய பக்கத்தில் தனக்கு மையோசிடிஸ் எனும் மர்ம நோய் தாக்கம் இருப்பதாகவும் அதற்கான சிகிச்சையில் தற்போது தன்னை ஈடுபடுத்தி வருவதாகவும் அதில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து அந்த நோயின் தாக்கம் அதிகரித்த நிலையில் மேற் சிகிச்சைக்காக தென்கொரியா சென்று வந்ததை அடுத்து தற்போது அவ்வளவாக படங்களில் நடிப்பதை தவிர்த்து தனது உடல் நிலையை கவனிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இதனைதொடர்ந்து

சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அடிக்கடி சில புகைப்படங்களையும் ஜிம்மில் வொர்கவுட் செய்யும் வீடியோ பதிவுகளையும் பதிவிட்டு வருகிறார். இப்படி இருக்கையில் சமந்தா சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் புகைபடத்துடன் கூடிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளர்ர் அதில் கையில் மோதிரத்துடன் இருக்கும்படியான புகைபடத்தை வெளியிட்டுள்ளார் இதைபார்த்த

பலரும் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா என பல கேள்விகளை எழுப்பி வரும் நிலையில் இன்று சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அதை நினைவு கூறும் வகையில் ஈஷா மோதிரத்தை அணிந்துள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…….