தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பாய்ஸ். இந்த படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் தன்னை ஹீரோவாக அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல நடிகர் சித்தார்த் இந்த படத்தை தொடர்ந்து ஆயுத எழுத்து , காதலில் சொதப்புவது எப்படி , உதயம் , அருவம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் . இதையடுத்து தற்போது தமிழ் ,மொழியை கடந்து தெலுங்கு , மலையாளம் , கன்னடம்

என பல மொழிபடங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதோடு சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அடிக்கடி பல பதிவுகளை பதிவிட்டு அதன் மூலம் பல கருத்துகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறார். இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களாக தனிமையில் வாழ்ந்து வரும் சித்தார்த் தற்போது பிரபல நடிகையான அதிதி ராவுடன் நெருக்கமாக பழகி வருவதாக பல தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கும் நிலையில்

சித்தார்த் அவர்களின் முதல் மனைவி குறித்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சித்தார்த் அவர்கள் கடந்த 2003-ம் ஆண்டு மேக்னா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இதையடுத்து இருவரும் சில காலங்களே இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும்

இடையில் சில கருத்து வேறுபாடுகள் வந்த  நிலையில் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் . இந்நிலையில் அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் போது எடுக்கப்பட்ட பல புகைபடங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது…….