தமிழ் சினிமாவில் தற்போது வெளியாகும் படங்களில் அதிகளவில் பல புதுமுக காமெடி நடிகர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருப்பதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது நகைச்சுவை திறமையின் மூலமாக வெகுவாக மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடிப்பில் வெளியான குட்டிபுலி

படத்தின் மூலமாக காமெடி நடிகராக திரையுலகில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல காமெடி நடிகர் பாலசரவணன் . இவர் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்னரே சின்னத்திரையில் பல முன்னணி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் நடித்துள்ளார் . இந்நிலையில் தனது முதல் படத்திலேயே தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் துடிப்பான நடிப்பால் வெகுவாக பலரையும் கவர்ந்த நிலையில்

அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முன்னணி காமெடியனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் திருடன் போலீஸ் , டார்லிங், வேதாளம், வலியவன், பண்ணையாரும் பத்மினியும் போன்ற பல படங்களில் மாறுபட்ட பல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் காதலியான சூர்யா

என்பவரை இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு இருமகள்கள் உள்ள நிலையில் இவர்களது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது. இதையடுத்து அந்த புகைபடத்தில் அவரது மனைவியை பார்த்த பலரும் என்னது இவங்களா அவரோட மனைவி என பலரும் வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்……….