திரையுலகில் பொறுத்தவரை படங்களில் கதை எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல் அந்த படத்தில் வெளியாகும் பாடல்களும் மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமாக இருப்பதோடு அந்த படத்தின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து வருகிறது . இந்நிலையில் இன்றைக்கு சினிமாவில் பின்னணி பாடகர்களாக பல  புதுமுகங்கள் வந்த வண்ணம் இருப்பதோடு தங்களது திறைமையான பாடல்களின் மூலமாக வெகுவாக மக்கள் மாதியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளனர் எனலாம். இருப்பினும்

இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக அந்த காலத்தில் இருந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல வெற்றிபாடல்களை தங்களது இனிமையான குரலில் இன்றைக்கும் பல ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து வைத்துள்ளனர் . அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல பாடல்களை பாடி திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை வைத்திருப்பவர் பிரபல பின்னணி பாடகர் மனோ. மேலும்

சொல்லப்போனால் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என பல மொழிப்படங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இதையடுத்து ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார் இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கமல் நடிப்பில் வெளியான சிங்காரவேலன் படத்தில் அவரது நண்பனாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு அவ்வளவாக நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும்

சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள மனோ பிரபல முன்னணி நடிகர் மிர்ச்சி சிவா கேஹீரோவாக நடித்துள்ள சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மனோ அவர்களின் குடும்பம் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது………