தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் மத்தியில் தனக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்து இருப்பதோடு தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித் . எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாத நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த அமராவதி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே துடிப்பான நடிப்பு மற்றும் அழகால்

பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்து திரையுலகில் தனி பிரபலத்தை ஏற்படுத்தி கொண்டது மட்டுமின்றி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொண்டார். இதனைதொடர்ந்து சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வாழ்ந்து வரும் அஜித் அவர்கள் பைக் ரேஸ், கார் பந்தயம் , துப்பாக்கி சுடுதல்,

ட்ரோன் என பல துறைகளிலும் வேற லெவலில் சாதனைகளை படைத்து வருகிறார். இப்படி இருக்கையில் சமீபத்தில் இவரது நடிப்பில் பிரபல இயக்குனர் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று இருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் அவர்கள் அடுத்ததாக ஏகே 62 படத்தில் பிசியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் இந்த

படத்தின் தகவல்கள் குறித்து இன்னும் எந்த தகவல்களும் வெளியாகத நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அஜித் அவர்களின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தி வரும் நிலையில் செம வைரளாகி வருகிறது………..