தற்போது மக்கள் மத்தியில் சினிமாவில் வெளிவரும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் வெளியாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் அதிகளவில் பிரபலத்தை பெற்று வருகிறது. அதிலும் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இப்படி இருக்கையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியை சமையல்

போட்டியை மையமாக கொண்ட போதிலும் இந்த நிகழ்ச்சியிலும் கோமாளிகள் செய்யும் நகைச்சுவை கலந்த சேட்டைகள் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றுள்ளது. இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியில் சீனியர் கோமாளிகளில் ஒருவராக இருந்த

விஜே மணிமேகலை தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார் அதில் இனி நான் வரமாட்டேன் இது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்  எனது கடைசி எபிசொட் எனபதிவிட்ட நிலையில் அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணம் என்ன என தெரியாத நிலையில் பலரும் பலவிதமாக கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சீனியர் கோமாளியான

குரேஷியும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போவதாக தகவல்கள் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து இது குறித்து சமீபத்தில் இணையத்தில் பதிவு ஒன்றை பதிவிட்ட குரேஷி, காமெடி பண்ணாம காலமாக மாட்டேன் குக் வித் கோமாளி விட்டு போகமாட்டேன் என நக்கலாக பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது……….