சினிமாவில் வெளிவரும் படங்களை பொறுத்தவரை அந்த படங்களின் வெற்றிக்கு அந்த படத்தின் கதை எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல் அந்த படத்தில் வெளிவரும் பாடல்களும் ஒரு காரணமாக இருந்து வருகிறது. இவ்வாறு இருக்கையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல வெற்றி பாடல்களை தனது இனிமையான குரலால் பலரையும் தனது இசை ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன். இந்நிலையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்ட

இவர் தனது சிறுவயது முதலே கர்நாடக இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் அதை முறைப்படி கற்றுக்கொண்டு தொடர்ந்து பல வருடங்களாக நடந்து வரும் சென்னை திருவையாறு இசை நிகழ்ச்சியில் பாடி வருகிறார். இதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர்

நிகழ்ச்சிக்கு நடுவராக இருந்து வருகிறார். இந்நிலையில் உன்னி கிருஷ்ணன் அவர்களுக்கு கடந்த 1994-ம் ஆண்டு ப்ரியா என்பவருடன் திருமணம் முடிந்த நிலையில் இவர்களுக்கு உத்ரா எனும் மகளும் வாசுதேவ் எனும் மகன் ஒருவரும் உள்ளனர். இதில் அவரது மகளான உத்ரா தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த சைவம் படத்தில் அழகு எனும் பாடலை பாடி பலரையும் வியக்க

வைத்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து பிசாசு உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி வருகிறார். இப்படி இருக்கையில் இவரது மகளை தெரிந்த அளவிற்கு அவரது மனைவி மற்றும் மகன் குறித்து தெரியாத நிலையில் அவர்களது சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது. மேலும் அவரது மகன் வாசுதேவ் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்ட நிலையில் அதில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார் ………..