தமிழ் சினிமாவில் இன்றைக்கு பல இளம் நடிகர்கள் வந்துவிட்ட போதிலும் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகர்கள் இன்றைக்கும் நம் மனதில் தங்களுக்கென நீங்காத ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளனர் . அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து

வந்ததோடு கதைக்கு ஏற்ப பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் பிரபல முன்னணி நடிகர் சரவணன். இவ்வாறு பல படங்களில் நடித்து வந்த போதும் இவருக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில் சில காலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார், இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில்

வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற பருத்திவீரன் படத்தில் சித்தப்பு கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இந்த படத்தை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் தற்போது வெள்ளித்திரையை தாண்டி

சின்னத்திரையிலும் பல முன்னணி தொடர்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவரது குடும்பம் மற்றும் மனைவிகள் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது………..