தற்போது சினிமாவில் படங்களில் ஏராளமான புதுமுக இளம் நடிகைகள் ஹீரோயினாக அறிமுகமாகி நடிக்கும் ஒரு சில படங்களிலேயே தங்களது இளமையான தோற்றம் மற்றும் எல்லைமீறிய நடிப்பால் பல இளசுகளின் மனதையும் வெகுவாக கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ஒரு பிரபலத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் இவர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில் பல

முன்னணி நடிகைகள் இன்றளவும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாளத்தை பூர்விகமாக கொண்டு தமிழ், தெலுங்கு. மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருவதோடு கதைக்கு ஏற்ப பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் பிரபல முன்னணி நடிகை மஞ்சு வாரியார். இதையடுத்து தமிழ் அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக வயதான

கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் வியக்க வைத்திருந்த நிலையில் கடந்த சில ம்,மாதங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தல அஜித்குமார் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான துணிவு படத்திலும் மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக நடித்து பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருந்தார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாகி நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில்

எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வரும் நிலையில் சமீபத்தில் தனது தாயார் மற்றும் சகோதரர் உடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவரது சகோதரரை பார்த்த பலரும் அட இவரா அது என வாயடைத்து போயுள்ளனர் ………..