மக்கள் மத்தியில் தற்போது பெரிதளவில் பிரபலமாக பேசுபொருளாக இருந்து வருவது பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை பற்றியதாக தான் இருக்கும். அந்த வகையில் இந்த படம் பெருத்த ஆவலுடன் இருக்க காரணம் இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன், த்ரிஷா, மேத்யு மன்சூர் அலிகான் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்து வரும் நிலையில் இந்த படம் லோகேஷ்

இயக்கிய முந்தைய படங்களின் தொடர்ச்சியாக இருக்கும் எனவும் பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதையடுத்து இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக படக்குழு தொடர்ந்து பல புது அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை திணறடித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் தற்போது மேலும் ஒரு புது அப்டேட் வெளியாகி வேற லெவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் லியோ படத்தின் முதற்கட்ட

படபிடிப்பு காஷ்மீரில் இன்னும் சில தினங்களில் முடிய இருக்கும் நிலையில் இதில் சஞ்சய் தத், மிஸ்கின், த்ரிஷா கவுதம் மேனன் ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் அடுத்து படக்குழு பத்து நாட்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு மீண்டும் இரண்டாவது கட்ட படபிடிப்பை சென்னையில் நடத்த உள்ள நிலையில் அதற்காக பிரமாண்டமான செட் ரெடி வருகிறதாம். மேலும் இதில் மன்சூர்

அலிகான் , சஞ்சய் தத் , தளபதி விஜய் ஆகியோருக்கான காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது. இந்நிலையில் படக்குழு காஷ்மீரில் எடுத்த காட்சிகளின் தொகுப்பை ஒரு ட்ரைலர் வீடியோவாக வெளியிடவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது……….