தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்த பல நடிகைகள் தற்போது இளம் நடிகைகளின் வரத்து காரணமாக இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போவிட்ட்னர் எனலாம் . இருப்பினும் இதில் ஒரு சில நடிகைகள் மட்டும் தொடர்ந்து படங்களில் கிடைக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றனர். அந்த வகையில் அந்த காலத்தில்

முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல முன்னணி  நடிகை பானுப்ரியா. ரஜினி, கமல், விஜயகாந்த் , சத்யராஜ் என பல முன்னனி நடிகர்களுடன் ஜோடியாக தனது வசீகரமான தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் . இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக வாய்ப்புக்கள் வராத நிலையில்

சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த அம்மிணி மீண்டும் ரீன்ட்ரி கொடுத்து தற்போது பல இளம் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்களில் அம்மா, செண்டிமெண்ட், குணசித்திரம் என பல மாறுபட்ட கதா பாத்திரங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் கடந்த 1988-ம் ஆண்டு ஆதர்ஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு அபிநயா

எனும் மகள் ஒருவரும் உள்ள நிலையில் இருவருக்கும் இடையில் அடிக்கடி சில கருத்து வேறுபாடுகள் இருந்து வந்த நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் அதன் பின்னர் தனிமையில் வாழ்ந்து வரும் பானுப்ரியா சமீபத்தில் தனது முன்னாள் கணவர் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது…………