தமிழ் சின்னத்திரியானது தற்போது வெள்ளித்திரையை விட மிகப்பெரும் உயரத்தில் உள்ளது என்றே சொல்ல வேண்டும்… இப்படி சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான எத்தனையோ பேர் வெள்ளித்திரையில் கலக்கி இருக்கிறார்கள். ஒரு சில வெள்ளித்திரை சின்னத்திரை என இரண்டு துறைகளிலும் அடையாளம் தெரியாமல் காணாமல் பொய் இருக்கின்ற்றனர்.

இப்படி சின்னத்திரை காமெடி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான கோவை குணா காலமானர். இந்த செய்தி சின்னத்திரை வெள்ளித்திரை என பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது . இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நிலையில், டயாலிசிஸ் சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்நிலையில் இவருக்கு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.