திரையுலகில் கடந்த சில வருடங்களாக பல முன்னணி நடிகர் நடிகைகளும் எதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு தொடர்ந்து காலமாகி வருகின்றனர் இப்படி இருக்கையில் அதிலும் பல இளம் நடிகைகள் விடாது மர்மமான முறையில் காலமாகி வரும் நிகழ்வு அரங்கேறி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல முன்னணி நடிகை ஒருவர்  தனது ஹோட்டல் அறையில் எதிர்பாரதவிதமாக காலமாகி கிடந்த

நிகழ்வு இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெருத்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் போஜ்புரி சினிமாவில் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் பிரபல இளம் நடிகை அகன்ஷா தூபே இவர் முதலில் சோசியல் மீடியாவில் வெளியான டிக்டாக் மற்றும் ரீல்ஸ் செயலிகளில் வீடியோ வெளியிட்டு அதன் மூலமாக மக்கள் மற்றும் திரை வட்டாரத்தில் பிரபலமாகி தற்போது சினிமாவில் பல முன்னணி நடிகர்களின்

படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் படத்தின் படபிடிப்பு வேலைக்காக அங்கு இருந்த தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அகன்ஷா தூபே அந்த அறையில் மர்மமான முறையில் காலமாகி கிடந்துள்ளார் . இந்நிலையில் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கபட்ட நிலையில் அங்கு வந்த போலீசார் இதற்கான காரணம் என்ன

என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி இருக்கையில் அகன்ஷா காலமாவதற்கு முன்னர் தனது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் தனது நடன திறமையை நிருபிக்கும் வகையில் வேற லெவலில் டான்ஸ் ஆடியுள்ளார் . இதையடுத்து இந்த வீடியோ மற்றும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது………