இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் படங்களில் நடித்து பிரபலமானவர்களை காட்டிலும் சின்னத்திரை மற்றும் சோசியல் மீடியாவின் மூலமாக பலத்த பிரபலத்தை பெறுபவர்களே ஏராளம் எனலாம். அந்த வகையில் பிரபல முன்னணி தனியார் சேனலான விஜய் டிவியில் வெளியாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரும் மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்ட நிலையில்

கடந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டவர்  பிக்பாஸ் ரசித்தா . இவர்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னரே பல முன்னணி தொடர்களில் கதையின் நாயகியாக நடித்து வந்த நிலையில் தன்னுடன் தொடர்களில் ஜோடியாக நடித்த பிரபல சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பின்னரும் இருவரும் தொடர்ந்து பல தொடர்களில் நடித்து வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சில மாதங்களுக்கு முன்னர்

இருவருக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து ரசித்தா பிக்பாஸ்  வீட்டில் இருக்கும் போது கூட இது குறித்து பல பேட்டிகளில் தினேஷ் பேசியிருந்தார் இதனால் தான் அவர் பிக்பாஸ் வீட்டுக்கு கூட வரவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் பல தொடர்கள் மற்றும் படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அடிக்கடி பதிவுகள் மற்றும் புகைபடங்களை பதிவிட்டு வருகிறார். இப்படி இருக்கையில்

சமீபத்தில் கூட குழந்தையை தத்தெடுத்து வளர்க்க போவதாக கூறியிருந்த நிலையில் தற்போது படபிடிப்புக்காக இலங்கை சென்றுள்ள ரசிதா பல புகைபடங்களை பதிவிட்டு வரும் நிலையில் பிரபல சீரியல் நடிகர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைபார்த்த பலரும் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்……………