தமிழ் சினிமாவில் துவக்கத்தில் பின்னணி நடன கலைஞர்களில் ஒருவராக தனது திரையுலக பயணத்தை தொடங்கிய அளவில் இன்றைக்கு இந்திய அளவில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவா அவர்கள் . இந்நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிப்படங்களில் நடன இயக்குனராக கலக்கி வருவதோடு தமிழில் பல படங்களில் ஹீரோவாக நடித்தும் வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் கலவையான

விமர்சனத்தை பெற்ற நிலையில் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் பிரபுதேவா அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. அந்த வகையில் பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சில கருத்து

வேறுபாடுகள் காரணமாக அவரது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார் . இதனைதொடர்ந்து  தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் கொரோனா சமயத்தில் முதுகுவலி காரணமாக பிசியோத்ரபிஸ்ட் மருத்துவர்  ஹிமானி சிங்கிடம் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிப்போனதை அடுத்து இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும் இவர்களது திருமணம் குறித்த எந்தவொரு அதிகாரபூர்வ தகவல்களும்

வெளியாகாமல் இருந்த நிலையில் சமீபத்தில் இருவரும் ஒன்றாக திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த நிலையில் அங்கு எடுத்துக்கொண்ட பல  புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்ட நிலையில் அதைபார்த்த பலரும் அட இவரா இவரோட இரண்டாவது மனைவி என வாயடைத்து போனதோடு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் …….