தென்னிந்திய சினிமாவில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல ,முன்னணி நடிகர் நடிகைகளும் படங்களில் நடிப்பதை தாண்டி தங்களது குடும்ப வாழ்க்கையில் இணையும் விதமாக திருமணம் செய்து கொண்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இதற்கு நேர்மறையாக பல முன்னணி பிரபலங்களும் தங்களது திருமண உறவை முறித்து கொள்ளும் வகையில் விவாகரத்து செய்தும் வருகின்றனர் . அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளில்

ஒருவராக வலம் வந்தது மட்டுமின்றி தனது கட்டுடல் மேனி மற்றும் நடிப்பால் பல இளசுகளின் மனதையும் கொள்ளையும் கொண்டு தனக்கென  தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை அசின். இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு பிரபல தொழிலதிபரான ராகுல் சர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் அவ்வளவாக படங்களில்

நடிப்பதை குடும்பத்தை கவனித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அசின் தனது கணவரை விவாகரத்து செய்ய போவதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் இது குறித்து அசின் தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் தராத நிலையில் இது முற்றிலும் பொய்யான தகவல் என வெளியானது. இது ஒரு பக்கம் இருக்க அசின் அவர்கள் தனது திருமணத்தின் போது

அணிந்துகொண்ட மோதிரத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. காரணம் அந்த மோதிரத்தின் மதிப்பு மட்டும் சுமார் 6 கோடிக்கும் மேலாக இருக்குமாம். இப்படி ஒரு நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் உறைந்து போயுள்ளனர்……………