தற்போது மக்கள் மத்தியில் படங்களில் நடிக்கும் நடிகர்களை காட்டிலும் சின்னத்திரையில் தொடர்கள் மற்றும்  ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் அதிகளவில் பிரபலமாக உள்ளார்கள். அதிலும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் என்றே தனி ரசிகர் பட்டாளமே  உள்ளது. அந்த வகையில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி தொகுப்பாளினி டிடி

எனும் திவ்ய தர்ஷினி. தனது சிறுவயது முதலே திரையுலகில் பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்துள்ளார். இதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரையுலகில் டிடி கவனம் செலுத்தி வந்த நிலையில் இவர்கள் இருவருக்கும்

இடையில் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்து வந்ததை அடுத்து விவாகரத்து பெற்று தற்போது தனிமையில் வாழ்ந்து வருகிறார். அதோடு சில காலம் சினிமா மற்றும் டிவி  நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த  நிலையில் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் விதமான பல  முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மற்றும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல நடிகர் அதர்வா நடிப்பில் வெளியாகவுள்ள மத்தகன் படத்தில்

முக்கிய கதாபாத்திரத்தில் டிடி நடித்துள்ளார். இதையடுத்து இந்த படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிடி அதில் தான் ஹ்ருத்திக் ரோசனை விரும்புதாகவும் அடுத்த ஜென்மத்தில் ஏஆர் ரஹ்மானை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வெளிப்படையாக கூறியுள்ளார். இதனைதொடர்ந்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது………………………….