கடந்த சில வருடங்களாக திரையுலக பிரபலங்கள் பலரும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டு பல இன்னல்களை சந்திந்து வருகின்றனர் அதிலும் தமிழ் சினிமாவில் இந்த நிலை அதிகரித்து வருவதை அடுத்து தற்போது மேலும் ஒரு முன்னணி பிரபலம் உடல்நிலை மோசமான நிலையில் மருத்துவமனையில் இருக்கும் தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனது சிறுவயது முதலே குழந்தை நட்சத்திரமாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பலரது மனதை கொள்ளை கொண்டவர் விஜே கல்யாணி. அள்ளித்தந்த வானம் , ரமணா, ஜெயம் போன்ற பல படங்களில் நடித்து

பிரபலமானதை அடுத்து வளர்ந்த பின்னரும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்ததோடு சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் விஜே கல்யாணி கடந்த சில வருடங்களுக்கு இங்கிலாந்தை சார்ந்த மருத்துவரான ரோஹித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு நவ்யா எனும் மகள் ஒருவரும் உள்ளார். இதையடுத்து சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் விஜே கல்யாணி சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில், நான்

மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் சோர்வாக இருக்கிறேன். மேலும் எனது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது எனக்கு கடந்த 2016-ம் ஆண்டு முதுகுத்தண்டில்  அறுவை சிகிச்சை நடந்தது அதன் பின்னர் சில காலம் நலமாக இருந்தேன். இதையடுத்து எனக்கு நவ்யா மகளாக பிறந்தாள். இதனைதொடர்ந்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் எனது முதுகுதண்டுவட மருத்துவரிடம் ஆலோசனை செய்தேன் அவர் அப்போது எனது முதுகுதண்டுவட பிரச்சனை இன்னும் குணமாகவில்லை ஆகையால் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்து அந்த ஸ்க்ருவை அகற்ற வேண்டும் என கூறினார். மேலும்

அந்த ஸ்க்ருவை நீக்கி விட்டு வேறு ஒருவருடைய எலும்பை அதில் பொருத்த வேண்டும் அதோடு இந்த முறை குணமடைய வெகு நாட்கள் ஆகலாம்  எனவும் கூறியதை அடுத்து எனது கணவர் ரோஹித் எனது கையை இறுக பிடித்து கொண்டார். அதுமட்டுமின்றி இந்த தருணத்தில் எனது ஐந்து வயது மகள் நவ்யா என் மீது காட்டிய பாசத்தை என்னால் மறக்கவே முடியாது எனவும் உருக்கமாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பலரும் அவர் விரைவில் நலமாக  திரும்பி வர ஆறுதல் கூறி வருகின்றனர்……………………

 

 

 

 

 

 

 

 

 

View this post on Instagram

 

A post shared by Kalyani Rohit (@kalyanirohit)