கடந்த சில வருடங்களாக திரையுலக பிரபலங்கள் பலரும் சினிமாவில் நடிப்பதை தாண்டி தங்களது இல்லற வாழ்க்கையில் இணையும் விதமாக தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர் . அந்த வகையில் பல முன்னணி திரையுலக பிரபலங்கள் கடந்த சில மாதங்களில் திருமணம் செய்து கொண்டு வரும் நிலையில் இதில் பலவும் காதல் திருமணமாகவே இருந்து வருகின்றனர் . இப்படி ஒரு நிலையில் தற்போது மேலும் சினிமா பிரபலங்கள் இருவரும்

காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர் . இந்நிலையில் இளம் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் அசோக் செல்வனும் பிரபல முன்னணி நடிகரான அருண் பாண்டியன் அவர்களின் மகளும் இளம் நடிகையுமான கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் ஜோடியாக நடித்து வருவதை அடுத்து இருவருக்கும் இடையில் நெருக்கம்

ஏற்பட்டு அது காதலாக மாறிப்போனதை அடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் இன்று காலை மிகவும் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்தது . இதையடுத்து இவர்களது திருமணத்தில் தென்னிந்திய அளவில் முன்னணி சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் . மேலும் இளம் நடிகையும் கீர்த்தி பாண்டியனின் சகோதரியுமான

ரம்யா பாண்டியன் தனது இணைய பக்கத்தில் திருமண விழாவில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை பதிவிட்டு அதில் தனது தங்கைக்கும் அவரது கணவருக்கும் மனம் நிறைந்த திருமண வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார் . இதனைதொடர்ந்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் வைரளாகி வருவதோடு பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்……………..