இந்திய சினிமாவிலே தென்னிந்திய சினிமாவில் மட்டும் தான் இந்த காதல் கிசுகிசுக்களும் சர்ச்சைகளும் சற்று குறைவாகவே இருந்தது என்றே சொல்லலாம். இப்படி பாலிவூட் திரையுலகில் தான் எப்பொழுதும் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை என்று சொன்னாலும் அங்கு கூட தற்போது கிசுகிசுக்கள் அடிக்கடி குறைவாகவே வருகிறது என்றே சொல்லலாம். இப்படி குறிப்பாக தமிழ் சினிமாவில் அதிக காதல் தோல்விகளும், விவாகரத்து சர்ச்சைகளும் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

இப்படி நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிய போவதாக அறிவித்த நாள் முதலே இணையத்தில் அன்றாடம் ஏதாவது ஒரு தகவல்கள் உலா வந்துகொண்டே இருக்கின்றன.இவரிகளின் பிரிவுக்கு ஆயிரம் காரணம் கூறப்பட்டாலும், மகன்கள் வளர்ந்துள்ள நிலையில் தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்களின் பிரிவு முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை விவாகரத்து வரை செல்வதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், தனுஷ் கடந்த ஆண்டு ஹாலிவுட் படமான தி கிரே மேன் படப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றார். அப்போது தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்கள் இருவரையும் உடன் அழைத்து சென்றார். அப்போது, தனுஷ் படப்பிடிப்பில் இருந்தப்போது அவருடைய செல்போன் ஐஸ்வர்யாவிடம் இருந்துள்ளது.

அந்த நேரத்தில், சில நடிகைகளிடம் இருந்து நடிகர் தனுஷுக்கு போன் கால்ஸ் வந்துள்ளது. ஐஸ்வர்யா காலை எடுத்து பேசியபோது அவர்கள் பதிலளிக்காமல் துண்டித்துவிட்டனர். மேலும், இதேபோல் அந்த நடிகைகளிடம் இருந்து சில மேஸேஜ்களும் வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யா, தனுஷிடம் இன்னும் நீங்கள் இன்னும் திருந்தவி ல்லையா என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.

அப்போது இருந்தே கடுப்பான தனுஷ், இனிமேலும் ஒன்றாக இருப்பது சரியாக இருக்காது என முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகும் இருவருக்குள்ளும் சண்டைகளும் சச்சரவுகளும் தொடர்ந்த வண்ணம் இருந்ததால் இருவரும் பிரிந்தே இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தான் தற்போது விவாகரத்து வரை கொண்டுவந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் தற்போது வேலையில் முழு ஈடுப்பாட்டுடன் இருந்தாலும், இவர்களின் குடும்பத்தினர்கள் ஒன்றிணைந்து பிரச்சினையை முடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here