தமிழ் சின்னத்திரையானது தற்போது ஒரு மிகப்பெரிய உயரத்தினையே அடைந்துள்ளது என்றே கூறலாம். தற்போது புதிது புதிதான நிகழ்சிகளும் தொடர்களும் தற்போது வெளிவந்து  திரைபப்டங்களுக்கு நிகராக தற்போது வெற்றிபெற்றுகொண்டி இருக்கிறது என்றே சொலல்லாம். இப்படி இதற்க்கு எல்லாம் அடித்தளம் போட்டது எந்த நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலே பிரபலம் அடைந்து விடலாம் என்று இன்னும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பலரும் ஆர்வமாக இருக்கின்றனர்.

இப்படிபிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் பவானி ரெட்டி.தமிழ் இந்த ஐந்தாவது சீசனின் டைட்டில் வின்னராக ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பெற்ற நிலையில் மூன்றாவது இடத்தை பெற்றார் பவானி. பிக் பாஸ் 5-வது சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபிநய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நாடியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிநய் உடன் காதல் கிசுகிசு, அமீருடன் முத்தம் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வலம் வந்தவர் பாவனி. பலவித சர்ச்சைகளில் சிக்கினாலும் இறுதிவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை பிடித்தார் பாவனி.

பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பாகவே சின்னத்திரை சீரியல்களில் ஹீரோயினாக நடித்துள்ளார் பாவனி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமான 3 மாதத்தில் பாவனியின் கணவர் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உரையாடிய பாவனியிடம் ரசிகர் ஒருவர், ‘நீங்க மீண்டும் கல்யாணம் பண்ண போறீங்களா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த பாவனி, “என் வாழ்க்கையில் இனி திருமணம் என்பதே இல்லை. எனது முழு கவனமும் இனி நடிப்பில்தான் இருக்கப்போகிறது” எனக் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அப்படியே திருமணம் செய்துகொள்ளபோவதாக முடிவு எடுப்பது என்றால் எனது வீட்டில் விட்டுவிடுவேன் அவர்கள் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்வேன் என கூறி இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here