தமிழ் சினிமாவில் மற்ற திரையுலகை விட கடத்த இரண்டு ஆண்டுகளில் சர்ச்சைகளுக்கும் கிசுகிசுக்களும் பஞ்சமே இல்லை என்றே கூற வேண்டும். இப்படி பாலிவூட் திரையுலகில் தான் நாளுக்கு நாள் ஒரு கிசுகிசுக்களும் சர்சிகளும் வெளிவந்துகொண்டே இருக்கும் நிலையில் தற்போது தமிழ் சினிமாவிலும் இதே போல பல சர்ச்சைகளும் வந்துகொண்டு வருகிறது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட இளம் நடிகர்கள் தான் இது போன்ற வேளைகளில் சிக்கிக்கொண்டு சர்ச்சைகளில் சிக்கிகொல்கிரார்கள் என்றால் தற்போது முன்னணி நடிகர்களும் சிக்கிகொல்கிரர்கள்.
இப்படி நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் மனமொத்து பிரிவதாக கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில், “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இது பல வெள்ளித்திரை சின்னத்திரை பிரபலங்களுக்கும் ஆச்சர்யத்தையும் வருத்தத்தையும் ஏற்ப்படுத்தியது என்றே சொல்லலாம்.இதனிடையே தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவால் நடிகர் ரஜினி கடும் கவலைக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் ரஜினி “அவர்களின் பிரிவு தற்காலிகமானது என்றும், அவர்களுக்கு இடையே உள்ள பிரச்சனையை பேசி தீர்க்குமாறு வலியுறுத்தி வருவதாகவும்” கூறப்படுகிறது.
மேலும் இந்த விவாகரத்தால் ஏற்கனவே ரஜினி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தனிமையினை விரும்பி தனியாகவே இருப்பதாகவும் இதக்கு ஒரு முடிவு கட்ட தனனது மாப்பிள்ளையும் நடிகருமான நடிகர் தனுஷை வரவழைத்து சமரசம் செய்ய கொப்பிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.