தமிழ் சினிமாவில் கிசுகிசுக்களுக்கு பெயர் போன நடிகர்களாக இருப்பவர்கள் பலரும் இளம் நடிகர்கலாகவோ இளம் நடிகைகலாகவோ தான் இருப்பார்கள். இப்படி இவர்கள் என்னதான் முன்னணி பிரபலங்களாக வளர்ந்து விட்டாலும் கூட அவர்கள் மீது எதோ ஒரு கிசுகிசுக்கள் அடிக்கடி வளம் வந்துகொண்டு தான் இருக்கும். இப்படி தற்போது தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களும் விமர்சனங்களிலும் சர்சைகல்லும் சிக்கி வருகின்றனர்.

இப்படி நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து 18 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது விவாகரத்து செய்யப் போவதாக இருவரும் அறிவித்துள்ளனர். இந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிர்வலையை ஏற்படுத்தியது.மேலும் அவர்கள் இருவரும் பிரிய கூடாது என்று பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் கூறி வந்தனர். நடிகை கஸ்தூரி, இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் உட்பட பலரும் தங்களுக்கு அவர்களின் பிரிவு வேதனை அளிப்பதாக மீடியாவில் தெரிவித்தனர்.

மேலும் அவர்களின் பிள்ளைகளுக்காக இந்த முடிவை மாற்றிக் கொள்ளும் படி சோஷியல் மீடியாவில் தனுஷின் ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிம்பு, தனுஷுக்கு போன் செய்து இந்த விவாகரத்து தொடர்பாக பேசியுள்ளார்.

நடிகர் தனுஷ் தான் நடிக்கும் வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது ஹைதராபாத்தில் தங்கியுள்ளார். அப்போது சிம்பு அவருக்கு போன் செய்து விவாகரத்து முடிவை மாற்றிக் கொள்ளுங்கள், உங்கள் குழந்தைகளுக்காக நீங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று தன் நண்பரிடம் கூறியுள்ளார்.

திரையுலகில் தனுஷ், சிம்பு இருவரும் எதிரிகள் என்று ஒரு வதந்தி இருக்கிறது. ஆனாலும் நாங்கள் இருவரும் நண்பர்கள் தான் என்று அவர்கள் இருவரும் ஒரு முறை மேடையில் தெரிவித்தனர். தற்போது சிம்பு, தனுஷுக்கு போன் செய்து பேசிய இந்த செய்தி அவர்களுக்குள் இருக்கும் நட்பை காட்டுகிறது.

சிம்பு செய்த இந்த செயலால் அவரின் ரசிகர்கள் மிகவும் நெகிழ்ச்சியும், பெருமையும் அடைந்துள்ளனர். என்னதான் அவர்களுக்குள் தொழில் சம்பந்தமான போட்டிகள் இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு பிரச்சினை என்று வரும் பொழுது ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here