தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகர்கள் நடிகைகள் வலம் வந்த வண்ணம் இருக்கிறார்கள். பெரும்பாலும் சினிமாவில் நடிகர்களாக நடிப்பது என்பது ஒரு சராசரி குடிமகனின் மகன் மகளுக்கு வாய்ப்பு என்பது எட்டாக்கணியாகவே இருக்கிறது. பெரும்பாலும் சினிமாவில் பிரபலமாக இருப்பவர்களின் மகன் மகளுக்கு தான் சுலபமாக வாய்ப்பு கிடைகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அந்த வகையில் தமிழ் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபரும் மற்றும் அரசியல்வாதியாக திகழ்ந்தவர் தான் எச். வசந்தகுமார் அவர்கள். இந்நிலையில் கடந்த ஆண்டு கோரத் தாண்டவம் ஆடி உலகையே அச்சுர்த்திய கொரோன வைரஸ் ஏராளமானோரை பாதித்து பலி வாங்கியது. இந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட எச்.வசந்தகுமார் அவர்கள்  மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டே காலமானார்.

இந்நிலையில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்பவருமான எச்.வசந்தகுமாரின் மகன் தான் விஜய் வசந்த்.  பெரிய தொழிலதிபரின் மகன் என்ற அடையாளத்தை பெற்றவர் விஜய் வசந்த். சென்னை 28, மங்காத்தா, பிரியாணி, நண்பன், வேலைக்காரன் போன்று பல படங்களில் நடித்திருக்கிறார். பார்க்க சாதாரணமானவராக இருக்கும் இவர் வசந்த் அன் கோவின் உரிமையாளராவார். இந்த தேர்தலில் விஜய் வசந்த் கன்னியாகுமரி தொகுதியில் நின்று இப்போது வெற்றியும் பெற்றுள்ளார். தற்போது தனது அடுத்தக்கட்ட நேரங்களை மக்களுக்கு உதவும் பணியில் இறங்கியுள்ளார்.

இதனால் மக்களிடயே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறார். விஜய் வசந்த் கடந்த 2010ம் ஆண்டு நித்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.  இந்த நிலையில் தான் விஜய் வசந்த் தனது மனைவிக்கு திருமண நாள் வாழ்த்து கூறி முதன்முறையாக அவருடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.  தற்போது அந்த புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வைராக்கி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here