மாற்ற மூலி ரசிங்கர்களை விட தமிழ் சினிமா ரசிங்கர்கள் மனதில் திரைப்படங்களும் திரைப்பட பிரபலங்களும் ஆழமாக மனதில் ஊறிப்போனவர்கள் என்றே சொல்ல வேண்டும். இப்படி தமிழ் சினிமா பிரபலங்கள் என்ன புகைப்படம் வெளியிட்டாலும் அதனை இடிரான்ட் செய்வது அவர்களது புகைப்படங்களுக்கு லைக்குகளை தெறிக்க விடுவது என எப்பொழுதும் பிரபலங்களின் பக்கமே தனது பார்வையை வித்து இருப்பார்கள்.. இப்படி தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருப்பவர் தான் நடிகர் விஜய். கடந்த 1992ஆம் ஆண்டு அவரது தந்தை சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு எனும் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

முதல் படமே விஜய்க்கு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதனை அடுத்து தமிழ் சினிமாவில் விஜய்க்கு பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். என்னதான் இவரது தந்தை இயக்குனராக இருந்தாலும் ஆரம்ப காலத்தில் விஜய் தமிழ் சினிமாவில் பல அவமானங்களை சந்தித்து தான் வெற்றி கண்டார். நடிக்க வந்த புதிதில் விஜய்யை பலரும் கேலி செய்தனர். ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது இலக்கை நோக்கி மட்டுமே பயணம் செய்தார். அதனால் தான் தற்போது பல இளைஞர்களுக்கு விஜய் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

நடிகர் விஜய்க்கு உள்ள ரசிகர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள்தான். ரசிகர்கள் பெரும்பாலும் நடிகர் விஜய்யை அண்ணன் என்று தான் அழைத்து வருகிறார்கள். விஜய் படம் வெளியாகும் அன்று திரையரங்குகள் திருவிழா போன்று காட்சியளிக்கும் அந்த அளவிற்கு பட்டாசுகள் பாலாபிஷேகம் என ரசிகர்களின் அலப்பறைகள் அளவுக்கதிகமாக இருக்கும்.

அதேபோல் சமீபகாலமாகவே விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மெர்சல், சர்க்கார், பிகில் மற்றும் சமீபத்தில் வெளியான மாஸ்டர் உள்ளிட்ட அனைத்து படங்களுமே மாபெரும் வெற்றி பெற்றன. அதேபோல் வசூலிலும் சாதனை படைத்தன. தற்போது இவரது நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடிகர் விஜய் சிறுவயதில் கிருஷ்ணன் வேடத்தில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்றை பதிவிட்டு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here