தென்னிந்திய தமிழ் சினிமாவில் தற்போது பல புதுமுக நடிகர்கள் மற்றும் வாரிசு நடிகர்கள் அதிகமாகி கொண்டே இருக்கிறார்கள். இதனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும் பல நட்சத்திரங்கள் வாய்பிற்காக பல ஆண்டுகள் காத்து இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. பொதுவாக சினிமாவில் வாய்ப்பு என்பது மிகபெரிய விஷயமாக கருதப்படுகிறது. சினிமாவில் நடிக்கும் அனைவருமே உச்ச நடிகர்களாக வளம் வருவது  இயலாத காரியம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் எந்த சிபாரிசும் இல்லாமல் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து அதன் பின்பு துணை கதாநாயகனாக சில படங்களில் நடித்து படிப்படியாக பல ஆண்டு காலம் சினிமாவில் பணியாற்றி எந்த அழகும் இல்லாமல் தனது விட முயற்சியால் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும், பல ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து வைத்து மிகபெரிய முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.

தற்போது  இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழில் பல திரைப் படங்கள் வெளியாக உள்ளன. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என மற்ற மொழி படங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது ஹிந்தியில் மாநகரம் படத்தின் ரீமேக்கில் தமிழில் முனீஸ் காந்த் நடித்த வேடத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஸ்ரீராம் ராகவன் என்பவரின் இயக்கத்தில் உருவாகிவரும் மேரி கிறிஸ்மஸ் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது டைகர் 3 படத்தில் நடித்து வரும் கத்ரீனா அந்த படத்தை முடித்துவிட்டு விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இவர்களது கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் அதீகாரபூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்பதால் ரசிகர் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here