தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருவதோடு பல இளம் இயக்குனர்களுக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து வருபவர் பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் தற்போது பிரமாண்ட படைப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி வருகிறது பொதுவாகவே மணிரத்னம் படம் என்றாலே மக்கள் மத்தியில் தனி வரேவற்பு இருக்கும் எனலாம். அந்த வகையில்

இவரது இயக்கத்தில் வெளிவந்த அணைத்து படங்களும் மக்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் வேற லெவலில் கல்லாகட்டியதோடு இன்றளவும் பெருமளவில் ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவரது இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சாக்லேட் பாய் மாதவன் மற்றும் ஷாலினி நடிப்பில் வெளியாகி பல இளசுகளின் மனதை கவர்ந்து இழுத்த காதல் படம் என்றால் அது அலைபாயுதே படம் தான். முற்றிலும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த

படத்தில் ரோமன்ஸ் காட்சிகள் பாடல்கள் என அனைத்தும் நம்மை சொர்க்கத்தின் உச்சிக்கே கொண்டு சென்று இருக்கும். இந்த திரைப்படம் ஏறக்குறைய பல வருடங்கள் கடந்த நிலையிலும் இன்னமும் இளைஞர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்த அளவிற்கு பிரபலமான படத்தில் நடிப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தும் அதனை வேண்டாமென மறுத்து விட்டாராம் விக்ரம்

காரணம் இந்த படத்தில் ஷாலினிக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்த சொர்ணமால்யாவிற்கு ஜோடியாக நடிக்கவே விக்ரமை கேட்டுள்ளனர் ஆனால் அந்த சமயத்தில் இதை வேண்டாம் என கூறிய நிலையில் அவருக்கு பதில் வேறு ஒருவர் இதில் நடித்திருப்பார். இந்நிலையில் இந்த தகவல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் வைரலாகி வருகிறது…

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here