தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்து வந்த பல முன்னணி நடிகைகள் தற்போது பல இளம் நடிகைகளின் வரத்து காரணமாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய்விட்டனர். இப்படி இருக்கையில் திரையுலகில் அறிமுகமான முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பு மற்றும் அழகால் பல இளைஞர்களின் மனதை கொள்ளை

கொண்டவர் பிரபல முன்னணி நடிகை அஞ்சலி. அங்காடி தெரு படத்தின் மூலம் கதாநாயகியாக தன்னை அடையாளபடுத்தி கொண்ட இவர் இதற்கு முன்னரே பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் வெற்றியை அடுத்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததோடு முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்த்தி கொண்டார். தமிழ்,

தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் நடிகர் ஜெயுடன் கொண்ட காதல் காரணமாக அம்மினிக்கு பட வாய்ப்புகள் சரிய தொடங்கியது அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக பல தகவல்கள் வெளிவந்த நிலையில் அது வெறும் வதந்தியாகவே போனது. இதனைதொடர்ந்து இந்த நிகழ்வு காரணமாக சில காலம் மனமுடைந்து வீட்டிலேயே

கிடந்த அஞ்சலி என்ன ஆனார் என்றே தெரியாமல் இருந்தது. இவ்வாறு இருக்கையில் சமீபத்தில் மீண்டும் திரையுலகிற்கு ரீன்ட்ரி கொடுத்துள்ள அஞ்சலி பல படங்களில் கமிட்டாகி உள்ளதோடு இணையத்தில் ஒடிடி தளத்தில் பிரபல இயக்குனர் சித்தார்த் ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் பால் எனும் வெப் சீரியஸில் முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்து வருகிறார். இதையடுத்து அந்த தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது ….

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here