தமிழ் சினிமாவில் பொறுத்தவரை காமெடி, செண்டிமெண்ட் வில்லத்தனம் இதுபோன்ற குணசித்திர கதாபாத்திரங்களில் அதிகளவு நடிகர்களே நடித்து வந்த நிலையில் தற்போது இவர்களுக்கு போட்டியாக பல நடிகைகளும் நடித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல ,முன்னணி சேனலான சன் டிவியில் வெளிவந்த பிரபலமான தொடரான மர்மதேசம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை தேவதர்ஷினி. சின்னத்திரையில் பல

முன்னணி தொடர்களில் நடித்ததை அடுத்து வெள்ளித்திரையில் விவேக்குடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தனது தேர்ந்த நடிப்பு  மற்றும் நகைச்சுவையான பேச்சால் பலரது மனதை கொள்ளை கொண்டதை அடுத்து தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் தேவதர்ஷினிக்கு மகள் ஒருவர் உள்ள நிலையில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தும் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்து பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட படமான 96 படத்தில் அம்மா மகள் என இருவரும் நடித்துள்ளனர். அவரது மகளின் பெயர் நியாத்தி கடாம்பி மேலும் இவர் அந்த படத்தில் குட்டி ஜானுவின் தோழியாக

வேற லெவலில் நடித்து இருப்பார். அந்த படத்திற்கு பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் பார்க்க முடியாத நிலையில் தனது மகள் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தேவதர்ஷினி நான் விஜயுடன் இணைந்து மெர்சல் படத்தில் நடித்து இருந்தேன் ஆனால் என்ன காரணம் என தெரியவில்லை எனது காட்சிகளை அந்த படத்தில் நீக்கி விட்டார்கள் ஆனால் இதை நியாபகம் வைத்து அடுத்த படமான பிகில் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார் மேலும் அவர் என்னை எப்போதும் அக்கா என்று தான் அழைப்பார் அத்துடன் எனது மகளும் தளபதி விஜயின் ரசிகை. ஒருமுறை பிகில் சூட்டிங்கின் போது அவருடன் எனது மகளை போட்டோ எடுக்க அழைத்து சென்று இருந்தேன் ஆனால் அவர் ரொம்ப பிசியாக இருந்தார். உடனே

நானும் கவலையுடன் உக்கார்ந்து விட்டேன் ஆனால் சிறிது நேரத்தில் அங்கு வந்த விஜய் எனது மகளை பார்த்து நீங்கள் 96  படத்தில் நடித்ததை பார்த்தேன் உங்களை விட உங்க மகள் நடிப்பு சூப்பர் என என்னிடம் கூறினார். அதோடு எனது மகளுக்கு பிகில் படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது ஆனால் அந்த சமயம் அவளுக்கு தேர்வு இருந்த நிலையில் அது முடியாமல் போனது என கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் தனது மகளின் மாடர்ன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் தேவதர்ஷினி. அந்த புகைபடத்தில் அவரது  மகள் பார்ப்பதற்கு இளம் ஹீரோயினை மிஞ்சும் அழகில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிபோயுள்ளார் ….

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here