தென்னிந்திய சினிமாவில் தற்போது என்னதான் பல புதுமுக இளம் நடிகைகள் படங்களில் ஹீரோயினாக நடித்து மக்கள் மத்தியில் தங்களை பிரபலபடுத்தி கொண்டாலும் அந்த காலத்தில் நடித்த பல முன்னணி நடிகைகள் இன்றைக்கு படங்களில் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் பலரின் மனதில் இன்றும் கனவு கன்னியாக வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் படத்தில்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின்னர்

வளர்ந்து அவருக்கு ஜோடியாகவே பல படங்களில் நடித்து தனது வசீகரமான நடிப்பு மற்றும் அழகால் பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டவர் பிரபல முன்னணி கண்ணழகி நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பலமொழிகளில் இவர் ஜோடியாக நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். இவ்வாறு பிரபலமாக இருந்த நிலையில் வித்யாசாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேலும் இவர்களுக்கு நைநிகா எனும் மகளும் உள்ளார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் மீனா

நடித்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரது கணவர் உடல்நிலை குறைவு காரணமாக காலமானார்.  இதையடுத்து தற்போது தனது அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார் மேலும் அவரது அம்மா மற்றும் சித்தி இருவரும் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர்களாம். மீனாவின் அம்மாவான ராஜ் மல்லிகா கேரளாவில் உள்ள கண்ணூரை பூர்விகமாக கொண்டவர் இருப்பினும் தனது சிறுவயது முதலே சென்னையில் குடியேறி வாழ்ந்து வருகிறார். மேலும் இவரதுதங்கையின் பெயர் ராஜ் கோகிலா இவர் அந்த காலத்தில் எம்ஜிஆர் , சிவாஜி ஜெயலலிதா என  பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து படங்களில் நடித்தவர்.

இதையடுத்து பிரபல முன்னணி இயக்குனரான கர்ணனின் பல படங்களில் நடித்துள்ளார் இப்படி ஒரு நிலையில் தனது தங்கையுடன் இணைந்து படபிடிப்புக்கு சென்றதை அடுத்து மல்லிகாவும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இறுப்பினும் ஒரு கட்டத்திற்கு மேல் ஆந்திராவை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டு விட்டார். இந்நிலையில் சமீபத்தில் இந்த தகவல்கள் மற்றும் மீனாவின் அம்மா மற்றும் சித்தியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களின் மத்தியில் செம வைரலாகி வருகிறது….

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here