தென்னிந்திய தமிழ் சினிமாவில் தற்போது பல நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்கள். அவர்களுள் அதிகமாக பிற மொழி நடிகைகளாக தான் இருகின்றனர் . இன்றைய காலத்தில் நடிகர் நடிகைகளுக்கு தான் நடிக்கும் திரைப்படங்களின் மொழி தெரியாமலே சிலர் நடித்து வருகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இயக்குனர்களின் திறமையினால் அவர்களை அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து வைத்து விடுகிறார்கள். இதனால் அவர்கள் சுலபமாக நடித்து விடுகிறார்கள். தமிழ் சினிமாவில் எத்தனையோ பிற மொழி நடிகைகள் பிரபலமாக இருக்கிறார்கள்.
அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் நடிகை தான் சாய்பல்லவி. தற்போது சாய் பல்லவின் தங்கை பூஜா கண்ணன் விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் அறிமுகமாக உள்ளார். இதனால் தற்போது தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பிரேமம் படத்தில் நடித்ததற்கு பிறகு சாய்பல்லவியின் மார்க்கெட் எந்த உச்சத்தில் இருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போது தெலுங்கு சினிமாவே இவருக்கு அடிமையாகி விட்டது என்றே சொல்ல வேண்டும்.
முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை சாய்பல்லவியுடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என உக்கிரமாக வலம் வருகின்றனர். அந்த அளவுக்கு தனது நடிப்பு திறமையின் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இதனால் அம்மணி தன்னுடைய சம்பளத்தை கோடிகளில் பெற்றுக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பல நாட்களாகவே சினிமா வட்டாரங்களில் சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது உறுதியாகியுள்ளது.
விரைவில் பூஜா கண்ணன், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த படத்தின் செய்திகள் தொடர்ந்து வெளியாகும் எனத் தெரிகிறது. முன்னரெல்லாம் சாய்பல்லவி விட அவரது தங்கை அழகாக இல்லை என்ற கருத்துக்களே வந்தது. ஆனால் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து விட்டு இனி சாய்பல்லவி மார்க்கெட்டுக்கு ஆப்புதான் எனுமளவுக்கு அழகில் பட்டையை கிளப்பி பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார் பூஜா கண்ணன். தற்போது அவர் வெளியிட்டு உள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் குதுகலம் ஆகி கொண்டிருகிறார்கள்.