பொதுவாக சினிமாவில் ஆரம்ப காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் தற்போது திரைபடங்களில் குணசித்திர வேடங்களிலும் பல முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இவர்கள் கதாநாயகியாக நடிக்கும் போது இருந்த வரவேற்பை காட்டிலும் இப்பொழுது இவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு வேற லெவலில் உள்ளது எனலாம். அந்த வகையில் தற்போதைய பல முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பலத்த வரவேற்பை பெற்று வருபவர் தான் பிரபல முன்னணி நடிகை சரண்யா பொன்வண்ணன்.

இவர் ஆரம்பத்தில் பிரபல முன்னணி நடிகர் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமான நாயகன் படத்தின் மூலம் கதாநாயகியாக முதன் முதலில் திரையுலகில் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். அந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களிலேயே கதாநயாகியாக நடித்த சரண்யா அதன் பினனர் பெரும்பாலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானார். சொல்லபோனால் தமிழ் சினிமாவில் அம்மா கதாப்பாத்திரம் என்றாலே என்றாலே பல முன்னணி நடிகர்களின் முதல் விருப்பமே அது சரண்யாவாக தான் இருக்கும்.

அந்த அளவிற்கு அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து தனக்கென தனி ஒரு அடையாளத்தையே வைத்துள்ளார். தற்போது தமிழை கடந்து தெலுங்கிலும் அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதல் தேர்வாக இருப்பது என்னவோ சரண்யா தான். இந்நிலையில் இவர் கடந்த 1995-ம் ஆண்டு பிரபல குணசித்திர நடிகரான பொன்வன்னனை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு சாந்தினி மற்றும் பிரியதர்சினி என இருமகள்கள் உள்ளார்கள். இந்நிலையில் சமீபத்தில் மூத்த மகளான ப்ரியதர்சினிக்கும் விக்னேஷ் என்பவருக்கும் சென்னையில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்தது.

இந்த திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு பசுமை நிறைந்த பரிசு ஒன்றை கொடுத்தார். இதே போல் பிரபல இயக்குனர் சங்கர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டும் புத்தகத்தை பரிசளித்தார். இதன் காரணமாக தொடர்ந்து பல சினிமா பிரபலங்களின் இல்ல விழாவிற்கு கலந்து கொள்வதால் சினிமா சம்பந்தமான விசயங்களை எளிதில் அவரிடம் கொண்டு சேர்ந்து தீர்த்து கொள்ளலாம் என திரையுலகினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் கலந்து கொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here