தமிழ் சின்னத்திரையில் பிரபலமான இந்த தொலைக்காட்சியானது தன்னுடைய சிறப்பு படைப்பான பிக்பாஸ்  மூலம் சிகரம் தொட்டது. இந்த பிக்பாஸ் தொடர் டச்
மொழியின் பிக் ப்ரதர்  தொடரின் ரீமேக் ஆகும். இந்த பிக்பாஸ் தொடரானது 100 நாட்கள் ஒரு வீட்டில் போட்டியாளர்களை தங்களின் உண்மையான முகத்தை காட்ட வைத்து அதற்கு சில போட்டிகளையும் நடத்தி அதில் வெற்றி பெரும் போட்டியலருக்கே பரிசுதொகை வழங்கப்படும். மேலும் இந்த போட்டியானது 4 சீசன் கடந்து 5 வது சீசன்இல் அடி எடுத்து வைக்கிறது.

இதில் பிரபலமான நடிகர்கள் மட்டும் அழகான மாடல்களை போட்டியாளர்களாக தேர்வு செய்து பின்னர் அவர்களை ஒவ்வொருவராக வாரவாரம் எலிமினட்  செய்து அதில் வெற்றியாளரை தேர்வு செய்து அவருக்கு பரிசு தொகை வழங்கப்படும். பிக்பாஸ்  3வது தொடரில் இடம் பெற்ற போட்டியாளர்கல் மக்கள் மத்தியில் ஒரு நீங்கா இடத்தை பிடித்தார்கள் என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. இதில் இளைஞர்கள் ஆன கவின், சாண்டி, தர்ஷன், முகேன், லோஸ்லியா ஆகியோர் பிக்பாஸ் செட்டையே அதிரும் அளவிற்கு பாடல் பாடியும்,தாளம் போட்டும் அந்த சீசன் இல் கலக்கி இருந்தனர்.

அவர்களில் கவின்,லோச்லியா ஆகியோர் காதலித்தது மிகவும் அழகாக இருந்தது. தற்பொழுது பிக்பாஸ்  வீட்டில் இருந்து வெளியேறிய அவர்கள் இருவருமே எந்த புகைப்படத்திலும் தாங்கள் சேர்ந்திருப்பது போல வெளியிடவில்லை. தற்பொழுது லோஸ்லியா தமிழில் பல படங்கள் கமிட் ஆகியுள்ளாராம். ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப்  என்ற படத்தில் நடித்து அந்த பட ஷூட்டிங் முடிவுற்றது. அந்த படம் வெளியாக தாமதமாகும் நிலையில் தற்பொழுது கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் பிக்பாஸ் தர்சனுடன் இணைந்து நடித்துள்ளார்.

பிக்பாஸ்  சீசன் 3 இல் லோஸ்ளியாவும் தர்ஷனும் அண்ணன் தங்கையாக பழகி வந்தது அணைத்து பிக்பாஸ்  ரசிகர்களுக்குமே தெரிந்த ஒரு உண்மை. ஆனால் இந்த படத்தில் இருவரும் இணைந்து ரொமான்ஸ் காட்சிகளில் வெளுத்து வாங்கியுல்லார்கலாம். இதனை அறிந்த இவரது ரசிகர்கள் அண்ணன் என்று சொல்லி விட்டு அவருடன் இப்படி ரொமான்ஸ் செய்துள்ளீர்களே என்று லோஸ்ளியாவிடம் கேட்ட பொழுது நாங்கள் இன்னும் அண்ணன் தங்கையாக தான் பழகி வருகிறோம் இந்த ரொமான்ஸ் காட்சியை கூட சிரித்து கொண்டே தான் நடித்தோம் என்றும் படத்திற்காக நடிப்பது வேறு நிஜ வாழ்க்கை வேறு என்றும் லோஸ்லியா தங்களது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here