தற்போதைய காலக்கட்டத்தில் குறுகிய காலத்தில் உலகம் முழுவதும் பிரபலம் ஆகவேண்டுமானால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. இன்றைய சூழ்நிலையில் மக்கள் அதிகமாக விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி எது என்றால் அது சின்னத்திரை நிகழ்சிகளை தான். அந்த அளவுக்கு நாளுக்கு நாள் சின்னத்திரையில் புது புது நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் அரங்கேற்றி வருகிறார்கள். இதனால் மக்கள் வெள்ளித்திரையை ஓரங்கட்டி சின்னத்திரை நிகழ்சிகளை விரும்பி பார்த்து  ரசித்து வருகிறார்கள். இந்த சின்னத்திரையில் நடிக்கும் அணைத்து நடிகர் நடிகைகள் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ‘’பகல் நிலவு’’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.

இதில் இவரது க்யூட்டான நடிப்பு, ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.  இதையடுத்து, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி, ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த பிக்பாஸ் மூலம் இவருக்கு சினிமா திரையுலகில் நல்ல அடித்தளமாக அமைந்தது குறிபிடத்தக்கது.

இவர் அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் சர்ச்சையில் சிக்கி வெளியேறிய நிலையில், சமூக வலைதளங்களிலும் படு ஆக்டிவாக மாறினார். பல ஆடைகளில் மாடர்ன்  போஸ் கொடுத்து ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வந்தார்.

அந்த வகையில், தற்போது வெளியிட்ட ஒரு புகைப்படம் பார்வையாளர்களை வியப்படைய செய்துள்ளது. அந்த புகைப்படத்தில், கர்ப்பமாக இருக்கும் தோற்றத்தை போல் தெரிவதால், ஷிவானியை என்ன கர்ப்பமாகிட்டீங்களா? என கேள்வி கேட்டு வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் சமுகவளைதலங்களில் காட்டு தீயாய் வேகமாக  வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here