சின்னத்திரையில் பிரபல முன்னணி தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து தொடர்களும் நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சேனலில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக வெளியாகி உலகளவில் பல ரசிகர்களை தன் வசம் வைத்திருக்கும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வரும் வாரங்களில் வெளியாகவுள்ள நிலையில் இம்முறை மீண்டும் கமல் ஹாசன் அவர்களே நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். மேலும் இதையடுத்து இந்த

சீசனில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் மிகுதியாக உள்ள நிலையில் இது குறித்த எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பையும் பிக்பாஸ் வெளியிட நிலையில் சில தகவல்கள் அரசல்புரசலாக வந்த வண்ணம் உள்ளது. மேலும் இந்த சீசனில் மற்ற சீசங்களை காட்டிலும் பல புதிய ரூல்ஸ்களை போட்டுள்ளார்கள் அந்த வகையில் இதன்

ப்ரோமோவில் வந்தது போல் முழு வீட்டையும் காடு போன்ற செட்டப்பில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதோடு வழக்கம் போல் இந்த சீசன் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30-10.30 மணியளவில் வெளியாகும் ஆனால் அதுவே ஒடிடியில் பிக்பாஸ் அல்டிமேட் போலவே 24-மணிநேரமும் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்னும்

பல புதிய ஏற்பாடுகளையும் விதிமுறைகளையும் இந்த சீசனில் கொண்டு வர உள்ளதாக் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த முறை முன்பை காட்டிலும் அதிகளவில் போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதோடு பிரபலங்களை தாண்டி பொதுமக்களில் ஒருவரையும் இந்த முறை கலந்து கொள்ள வைப்பதாக சமீபத்தில் இணையத்தில் வீடியோ வெளியானது இது எந்த அளவிற்கு உண்மை என தெரியாத நிலையில் பொறுந்திருந்து பார்ப்போம் …

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here