தமிழ் சின்னத்திரையே இன்னும் வியந்து பார்க்கும் நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். கிட்டத்தட்ட தமிழில் மிகப்பெயர்யா பட்ஜெட்டில் கடந்த சில வருடங்களாக வெளிவந்த நிகழ்ச்சி என்று சொன்னால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி என்றே சொல்ல வேண்டும். இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்படியாவது கலந்துகொள்ளவேண்டுமென பல பிரபலங்களும் போட்டிபோட்டுக்கொண்டு ஆரவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் ஐந்து சீசங்கள் ஆகியும் மிகப்பெரிய ஆதரவை அளித்து வருகின்றனர். இப்படி பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் சீசன் 5.இதில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை கவர்ந்த ராஜு பிக் பாஸ் சீசன் 5 டைட்டிலை வென்றார், அவருக்கு அடுத்தபடியாக பிரியங்கா அதிக வாக்குகளை பெற்று அவருக்கு அடுத்த இடத்தை பெற்றார்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களிலும் பிக் பாஸ் குரலுக்கு பின்னணி பேசியவர் தான் சாஷோ.பிக் பாஸ் குரல் மூலமாக பிரபலமாகியுள்ள சாஷோ அந்த ஒரு நிகழ்ச்சியை தவிர வேறு எந்த நிகழ்ச்சிக்கோ படத்திற்கோ அவர் வாய்ஸ் கொடுத்ததில்லை.
இந்நிலையில் பிக் பாஸுக்கு வாய்ஸ் கொடுப்பதற்கு என்றே சாஷோவுக்கும் சம்பளம் வழங்கப்படுகிறது. அதன்படி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்காக அவர் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நூறு நாட்களுக்கு சேர்த்து சாஷோவுக்கு வழக்கப்பட்ட சம்பளம் பதினேழரை லட்சம் என கூறப்படுகிறது. அந்த வகையில் அவருக்கு மாதம் 5 லட்சம் சம்பளம் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.