தற்போது சூழ்நிலையில் இந்த கொரோனாவின் தாக்கத்தால் பல பிரபலங்களை நாம் இழந்து வருகிறோம். கடந்த பல மாதங்களில் பல சினிமா பிரபலங்கள் இந்த கொரோன வைரஸ் தாக்கத்தினால் காலமாகி வருவது தொடர்கதையாக இருக்கிறது. தற்போது காலக்கட்டத்தில் கொரோன இரண்டாம் அலை முடிந்து மூன்றாம் அலை தனது தாக்கத்தை தொடங்கி இருக்கிறது. இதனால் பொது மக்களை விழிப்புடன் இருக்குமாறு ஏற்கனவே உலக சுகாதார துறை ஆலோசனை வழங்கி இருக்கிறது. இதனால் அனைவரும் பொது இடங்களில் கட்டயாமாக மாஸ்க் அணியுமாறு அறிவுறுத்தி உள்ளார்கள்.

தற்போது மேலும் ஒரு சினிமா பிரபலம் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலிவுட் நடிகரான திலீப் குமார் 1994-ல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அடுத்து, சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார். 1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக 1998-ல் நடித்தார். இதையடுத்து, 98 வயது திலீப் குமாருக்குச் சமீபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இரு வாரங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

இந்த நிலையில், தற்போது மூச்சுத் திணறல் மீண்டும் ஏற்பட்டதால் இந்த மாதம் 2-வது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், மும்பை ஹிந்துஜா மருத்துவமனையின் அதிநவீன  சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது இவரை பற்றிய தகவல்கள் வெளியாகி சமுகவளைதலங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here