இப்பொழுதெல்லாம் திரைபபடங்கள் ரசிகர்கள் மத்தியில் எளிதாக சென்றடைகிறதோ இல்லையோ இந்த தொலைக்காட்சி தொடர்களும் டிவி நிகழ்சிகளும் எளிதில் மக்களை சென்றடைகின்றன என்றே சொலல் வேண்டும். இப்படி தமிழ் சின்னத்திரையில் எப்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சி வந்ததோ அப்பொழுதே இந்த டிசி நிகழ்சிகள் புதிய உயரத்தை அடைந்து விட்டன என்றே சொல்ல வேண்டும். இப்படி வெளியாகி ரசியக்ர்களைடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.. இப்படி இந்த விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமையல் நிகழ்ச்சியை வெறும் சமையல் நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல் காமெடி கலந்த ஒரு என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சியாக வழங்கி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் வரும் காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இதில் கோமாளிகளாக வரும் புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை ஆகியோர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்களில் புகழ்,பாலா, ஷிவாங்கி ஆகியோர் படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

வெங்கடேஷ் பட், செப் தாமு இருவரும் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். மேலும் இந்நிகழ்ச்சியின் முதல் சீசனை ரக்சன் மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கினர்.இதையடுத்து 2-வது சீசனை ரக்சன் மட்டுமே தொகுத்து வழங்கினார் . இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியை ரக்சனுடன் இணைந்து மணிமேகலை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு சீசனிலும் கோமாளியாக வந்து ரசிகர்களை கவர்ந்த மணிமேகலை மூன்றாவது சீஸனில் ஆங்கராக இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மணிமேகலை ஏற்கனவே சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here