தென்னிந்திய சினிமாவில் இவரை தெரியதவர்களே இருக்க  மாட்டார்கள்.அந்த அளவிற்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ஒரு இடத்தை இன்றளவும் கொண்டிருப்பவர் தான் மலையாளத்தின் மாடர்ன் அழகி சகீலா. முதலில் மற்ற நடிகைகளை போலவே சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான ஷகீலா. சில சூழ்நிலை காரணங்களால் வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின் தொடர்ந்து வேறு படங்களில் நடித்து வந்த ஷகீலா அந்த வட்டாரத்தில் புகழின் உச்சிக்கு சென்றார். அதனை தொடர்ந்து திரைப்படங்களில் அவ்வபோது சிறுசிறு கதாபதிரங்களில் நடித்து வந்தார்.

இவ்வாறான நிலையில் பல வருடங்களாக படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளமால் இருந்த ஷகீலா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். முதலில் என்ன ஷகீலா எல்லாம் இந்த நிகழ்ச்சியில் என கூறி வந்தவர்களே தற்போது தற்போது அவரை அம்மா என அழைக்கும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது இந்த நிகழ்ச்சி. தன்னுடைய பழைய நினைவுகளை முற்றிலும் மக்கள் மனதில் இருந்து நீக்கி தற்போது நல்லதொரு வரவேற்பை பெற்று தந்துள்ளது.

இவ்வாறான நிலையில் ஷகீலா ஒரு பெண்ணுடன் இருக்கும்படியான புகைபடங்களை அவ்வபோது பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அந்த யார் என கேட்பதற்கு முன் அவரே கடந்த வாரங்களில் வெளியான குக் வித் கோமாளி போட்டியாளர்கள் கலந்து கொண்ட ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் அழைத்து வந்து தன் வளர்ப்பு மகள் என அறிமுகம் செய்தார். ஷகீலாவின் வளர்ப்பு மகளான மிளா ஒரு திருநங்கை ஆவார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அஸ்வினுடன் இணைந்து புகைபடம் எடுத்து அதை தனது இணைய பக்கத்தில் “அஸ்வின் என்னுடைய இன்னொரு  சகோதரர்”என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ஷகீலா,இது என்னுடைய மகள் மிளா, இவள் இல்லையென்றால் என்னுடைய வாழ்க்கையில் எதுவுமே இல்லை. என்னுடைய நிறைய ஏற்ற தாழ்வுகளில் எனக்கு துணையாக இருந்தவர். அதேபோல் அவருடைய ஏற்ற தாழ்வுகளில் அவருக்கு துணையாக நான் இருந்திருக்கிறேன். ஷகீலாவிற்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் மிலாவை தனது மகளாக வளர்த்து வருகிறார். மேலும் மிளா சினிமாவில் நடிகை மற்றும் பேஷன் டிசைனராக உள்ளார். பல இளம் நடிகைகளுக்கும் நடிகர்களுக்கும் ஆடை அலங்காரம் செய்து போடோஷூட்க்கு உதவும் இவர் சினிமாவில் தனது அம்மாவையே மிஞ்சி ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here