நாம் அன்றாடம் உணவுக்காக பயன்படுத்தும் பல பொருட்களில் நமக்கே தெரியாமல் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது . அந்த வகையில் நாம் குழம்புக்காக பயன்படுத்தும் கொத்தமல்லி போல அதன் விதைகளும் வாசனை நிறைந்தது. இதன் விதைகளில் ஏராளமான நன்மைகள் உள்ளது.

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரோட்டீன் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. கொத்தமல்லி விதைகளை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால் உடலில் உள்ள பல பிரச்சனைகளைத் தடுக்கலாம். இந்த கொத்தமல்லி விதைகளை முதல் இரவே 4 டீஸ்பூன் அளவு ஊறவைக்கவேண்டும். இதனை மறுநாள் காலையில் இந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும்.  இது உடலுக்கு பல அற்புத பயனை வழங்குகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

கொத்தமல்லி விதைகளில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கண்களில் ஏற்படும் அரிப்பு, அழற்சி மற்றும் கண் சிவத்தல் போன்றவற்றை சரிசெய்ய பயன்படுகிறது. கொத்தமல்லி விதை ஊற வைத்த நீர் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை இதில் உள்ளது. அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த தண்ணீரை தினமும் குடிக்கலாம். இரவு தூங்கும் முன் தனியா விதைகள் மற்றும் பெருஞ்சீரகம் விதைகளை குளிர்ந்த நீரில் ஊற வைத்து அந்த நீரை காலை எழுந்ததும் கண்களில் தெளித்து கழுவுங்கள். இந்த நீர் கண்களுக்கு நன்மை பயக்கும். இப்படி தினமும் செய்தால் கண்களில் தொற்று ஏற்படாது.


மாதவிடாய் கால பிரச்சனைகள் 6 கிராம் கொத்தமல்லி விதைகளை 500 மிலி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, வெதுவெதுப்பான நிலையில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் ஈஸ்ட்ரோஜென் என்னும் ஹார்மோன் சீராக்கப்பட்டு, மாதவிடாய் சுழற்சி சிறப்பாக நடைபெற உதவும்.  சில பெண்கள் வெள்ளைப்படுதல் பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். அவர்கள், இந்த தனியா ஊறவைத்த தண்ணீரை வாரத்தில் இரண்டு முறை குடித்து வந்தால், இந்த பிரச்சனை தீரும். 3 கிராம் தனியா விதை பொடியை 150 மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இவ்வாறு தண்ணீரை குடிப்பதால் எலும்புகள் வலுவாகும். மேலும் எலும்பு சம்பந்தமான எந்த நோயும் வராது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here