உலகில் பெரும்பாலான மக்களின் காலமாவதற்கு  காரணமாக அமைவது மாரடைப்பு ஆகும். தற்சமயம் ஆண்கள், பெண்கள் வயது வித்தியாசமின்றி இளம் வயதிலேயே மாரடைப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.

இத்தகைய மாரடைப்பு வராமல் தடுப்பது பற்றி அனைவரும் விழிப்புணர்வு பெற்றிருப்பது அவசியமாகும். இந்நிலையில், கொழுப்பு சதை மிகுந்த மீன்களை சாப்பிடுவதால் மாரடைப்பு தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தடிமனான மீன், கொழுப்பு சதை நிறைந்த மீன்களை வாரம் ஒருமுறை சாப்பிடுவதன் மூலமாக மாரடைப்பு வராமல் தடுக்கலாம் என்று லண்டன் அறிஞர் ஒருவரின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிக அழுத்த கொழுப்பு புரதத்தினை வளர்க்க, கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் மெட்டபாலிஸம்களை வளர்க்க இந்த மீன் உணவுகளை சாப்பிடுவது உதவும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், தினமும் 30 மில்லி லிட்டர் கடுகு எண்ணெய், லியோனிக் அமிலம் கொண்ட உணவுகளை உண்ணுவதாலும் உடல் உபாதைகளை களைய முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here