பொதுவாகவே ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் சாமிப்படங்களை வைக்கத் தனி பூஜையறைகளை வைத்திருப்பார்கள். அதில் தங்களது இஷ்டத் தெய்வத்தின் புகைப்படத்தை வைத்தும் வழிபாடும் செய்வார்கள். அதேநேரம் இந்த பூஜையறையில் சில சாமிப்படங்களை மறந்தும் வைத்துவிடக்கூடாது.
அது என்ன தெய்வங்கள் எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.சனீஸ்வரர், நவக்கிரகங்களின் படங்களை இல்லத்திலும், பூஜையறையிலும் மறந்தும் வைத்து பூஜை செய்யக்கூடாது. நடராஜனின் உருவம் ஆடிக்கொண்டு இருப்பதால் அந்தப்படத்தை வைத்திருக்கும் குடும்பமும் ஆடிவுடும் என்பது ஐதீகம். அதேபோல் மொட்டையடித்த நிலையில் இருகும் முகனின் படத்தையும், கோவணம் கட்டிய நிலையில் இருக்கும் முருகனின் படத்தையும் வீட்டில் வைக்ககூடாது.
இதேபோல் கோபத்தோடு இருக்கும் காளிபடம்,. தலைக்கு மேல் வேல் இருக்கும் முருகனின் படத்தையும் வைத்து பூஜிக்கக்கூடாது. இதேபோல் கோர உருவம், கொடூர பார்வையோடு இருக்கும் தெய்வங்களின் படங்களை வைக்கக் கூடாது. .இதேபோல் உடைந்த, சேதமான சிலைகளையும் வீட்டில் வைத்து பூஜிக்கக் கூடாது.