தமிழ் சினிமாவில் எத்தனையி இளம் நடிகைகள் புதிது புதிதாக வளம் வந்து கொண்டே இருந்தாலும் இந்த முன்னணி நடிகைகளுக்கு கிடைக்கும் வரவேற்ப்பு இன்னும் இளம் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை என்றே சொல்ல வேண்டும். இப்படி என்னதான் வயது முதிர்ந்து போனாலும் இவர்களுக்கு இன்னும் ரசிகர் பட்டாளம் குறையாமல் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி  தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் அந்த நாயகி. சினிமாவை பொருத்தவரை ரிட்டையர் ஆக வேண்டிய வயது என்றாலும் இன்னும் நாயகியாக தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து வருகிறார். தயாரிப்பாளர்களும் இன்னும் அந்த நடிகை மீது நம்பிக்கை வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த நடிகையிடம் பெருசா ஏதோ எதிர்பார்க்கிறார்கள் போல. நீண்ட நாட்களாகவே சிக்க மாட்டேங்கிறார் என்கிறார்கள் சில தயாரிப்பாளர்கள்.

இந்நிலையில் அந்த நடிகைக்கு ஏற்கனவே நிச்சயமாகியிருந்த நிலையில் திடீரென அந்த கல்யாணத்தை நிறுத்தி விட்டு பழைய காதலர் ஒருவருடன் ஊர் சுற்ற ஆரம்பித்தார். உயரமான அக்கட தேச நடிகரான அவர் நடிகையை இஷ்டத்துக்கு யூஸ் பண்ணிக் கொண்டார்.

அந்த நாயகியும் காதலர் என்பதால் எதார்த்தமாகவும் பதார்த்தமாகும் பழகிவிட்டார். எப்படியாவது அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நினைத்து ஐடியா போட்ட நாயகிக்கு ஆப்பு வைத்து விட்டு வேறு ஒரு பெண்ணை நிச்சயம் செய்து கொண்டார் அந்த நடிகர். இந்நிலையில் சில நாட்களாகவே சோகமே சுமையாக தூக்கிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தார். இணையதளத்திற்கு வந்தால் ரசிகர்கள் அந்த காதல் முறிவை பற்றியே தொடர்ந்து கேட்பதால் சிறிது காலம் இணையதளத்திற்கு வருவதில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார்.

ஆனால் தற்போது நாயகி வேறுஒரு பழைய காதலர் ஒருவருக்கு தூதுவிட்டு உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஆரம்ப காலகட்டங்களில் அந்த விரல் நடிகருடன் ஒரு குப்பை படத்தில் நடித்தவர்தான் இந்த நாயகி. அப்போதே இருவருக்கும் ரொமான்ஸ் பற்றிக் கொண்டதாம்.

பின்னர் இருவரும் சிலகாலம் சுற்றி விட்டு பின்னர் தங்களுடைய கேரியர் கெட்டுவிடும் என இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வேறு வேறு பாதையில் பிரிந்தனர். அதன் பிறகு அந்த நடிகர் இரண்டு நடிகையுடன் காதலில் விழுந்து தடுமாறினார். அவரும் காதல் சோகம், இந்த நாயகியும் காதல் தோல்வி என இருக்கையில் அந்த நாயகி பழைய காதலருடன் நட்பு வளர்க்க ஆசைப்படுகிறாராம். இவர்கள் நடிப்பில் வெளிவந்த காதல் படம் ஒன்று பெரிய வெற்றியைப் பெற்றது.

தற்போது இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொள்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் அந்த நடிகருக்கும் அந்த நடிகை மீது ஒரு கண் இருக்கத்தான் செய்ததாம். தற்போது தான் அந்த காதல் கொஞ்சம் கொஞ்சமாக துளிர்விட்டு வருகிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here