நம்மில் பலருக்கும் தெரிந்த ஒன்றே பெண்களுக்கு மாதந்தரமாக நடக்கும் மாதவிடாய் சுழற்சி நாம் எளிதாக சொல்லிவிடும் இந்த நிகழ்வினால் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்கள் எவ்வளவு என்று அவர்களுக்கு மட்டும் உணர முடியும் . பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் என்பதே ஒரு வித அசெளகரியமான நிலையாக தான். இந்நிலையில், மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பையும் சிலருக்கு அதிகமாக உண்டாக்கும். இந்த மோசமான வலி மருத்துவத்தில் டிஸ்மெனோரியா என்றழைக்கப்படுகிறது. இது பொதுவான நிலை.

இதனை குறைக்க கண்ட கண்ட மருந்துகளை தான் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.  மாதவிடாய் சீராக மாதந்தோறும் நடக்க புதினா இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம்.  மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி நீங்க ஆவாரம் பூவின் பட்டையை பொடி செய்து கஷாயம் காய்ச்சி குடித்து வர எப்போதும் வயிற்று வலியே வராது. அதனையடுத்து அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்தும் சாப்பிட்டு வரலாம்.

மாதவிலக்கானது பலருக்கு சிறிதளவே வரும் அவர்கள் இலந்தைப்பூ மற்றும் வெற்றிலை சுண்ணாம்பு சேர்த்து மோரில் கலந்து குடித்து வர தடைப்பட்ட மாதவிடாய் சரியான முறையில் ஏற்படும். மாதவிடாய் நேரங்களில் அதிக அளவு உடல் சோர்வு ஏற்படும்.அந்த உடல் சோர்வு நீங்க கோதுமையை கஞ்சி போல் செய்து குடித்து வரலாம்.

அன்னாசிபழம் சாப்பிடுவதன் மூலம் வெள்ளைப்படுதல் குறையும்.அதுமட்டுமின்றி மாதவிடாய் நேரங்களில் சிலருக்கு மாதவிடாய் துர்நாற்றம் வரும். அதை தடுக்க அந்த நேரங்களில் முட்டை மற்றும் மாமிசத்தை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக அதிக அளவு பழச்சாற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.அது உடலிற்கு அதிக அளவு புத்துனர்ச்சியையும்,வலிமையையும் கொடுக்கும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here