சினிமா துறையில் இருக்கும் அணைத்து நடிகர் நடிகைகள் சினிமாவில் மட்டும் தான் ஒருவருக்கு ஒருத்தர்  என்ற கோட்பாட்டை கடைபிடிக்கிறார்கள். ஆனால் நிஜ வாழ்கையில் அப்படி இருப்பதில்லை . எவ்வளோதான் காதலித்து இருந்தாலும் காதலித்தவர்களை திருமணம் செய்தாலும் சிறிது மனகசப்பு ஏற்பட்டாலும் உடனே பிரிந்துவிடுகிறார்கள்.

இன்றைக்கு பார்த்தால் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள் நாளைக்கு பார்த்தால் அவரை விவாகரத்து செய்து விட்டு இன்னொருவருடன் திருமணம் என பதிவிடுகின்றனர். வெளிநாட்டு மக்களின் திருமண வாழ்க்கையை இந்தியாவில் சரியாக வாழ்ந்து வருபவர்கள் என்றால் அது சினிமா துறையினராகதான் இருக்க முடியும். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியாகி மக்கள் மற்றும் சினிமா  வட்டாரத்தில் பெரும் புகழை அடைந்த திரைப்படமான ராட்சசன் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தான் விஷ்ணு விஷால். ஆரம்பத்தில் கிரிக்கெட் வீரராக இருந்த விஷ்ணு திரைத்துறையின் மீது கொண்ட ஆர்வத்தால் கிரிகெட்டை விடுத்து சினிமாவில் நடிகராக நடிக்க ஆரம்பித்தார். பிரபல இயக்குனரான சுசீந்திரன் இயக்கத்தில் கபடி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வெண்ணிலா கபடி குழு திரைபடத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தனது தேர்ந்த நடிப்பால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை அடைந்தார். இதை தொடர்ந்து பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்து தற்போது சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இப்படி இருக்கையில் இவர் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்களுக்கு ஆர்யன் எனும் மகன் ஒருவரும் உள்ளார்.இந்நிலையில் இவர்கள் இவர்களுக்கும் பல வருடங்களாக கருத்து  வேறுபாடுகள் காரணமாக பல முறை பிரச்சனை வந்த காரணத்தால் ஏழு வருடங்கள் ஒன்றாக இருந்த இவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் விவாகரத்து செய்து கொண்டனர். இதன் காரணமாக தனித்து வாழ்ந்து வந்த விஷ்ணு விஷால் ராட்சசன் படத்தில்  ஜோடியாக நடித்த அமலாபாலுக்கும் இவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ளபோவதாக தகவல்கள் சினிமா வட்டாரங்களில் கசிந்த வண்ணம் இருந்தது.ஆனால் அது சிறிது மாதங்களிலேயே பொய்யாகி போனது.

இப்படி ஒரு நிலையில் விஷ்ணு விஷால் தற்போது பிரபல பேட்மிட்டன் வீராங்கனையான ஜுவாலாவை காதலித்து வருகிறார். இதை உறுதிபடுத்தும் வகையில் ஜுவாலாவின் பிறந்தநாளன்று இருவரும் மோதிரம் மாற்றி இவர்களது திருமணத்தை உறுதி செய்தனர். சரி பரவாயில்லை ஏற்கனவே விவாகரத்து ஆன விஷ்ணு விஷாலை ஜுவாலா திருமணம் செய்து கொள்கிறார் என பார்த்தால் இவரும் ஏற்கனவே விவாகரத்து ஆனவர் தான் என்பது போலும், ஆமாம் இவருக்கு முன்னதாகவே 2005-ம் ஆண்டு சேத்தன் ஆனந்த் எனும் பேட்மிட்டன் வீரருடன் திருமணம் நடந்துள்ளது. ஆறு வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் சில காரணங்களால் பிரிந்து விட்டனர்.இப்படி ஒரு நிலையில் தான் விஷ்ணு விஷாலும் ஜுவாலாவும் முறைப்படி திருமணம் செய்து கொள்ளபோகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here