தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகரகள் இருந்தாலும் தனக்கென தனி ஒரு அடையாளத்தை ரசிகர்கள் மத்தியில் வைத்திருப்பவர் தான் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள். திரைப்படங்களில் வெறும் நகைச்சுவையை மட்டும் செய்து போகாமல் மக்களிடையே நகைச்சுவையின் மூலம் பல நல்ல சிந்தனைகளை விதைத்தவர். விவேக் அவர்கள் ஆரம்பத்தில் தனது கல்லூரிப் படிப்பை முடித்து தலைமை செயலகத்தில் பணியாற்றி வந்தார். இதன் பிறகு சினிமாவின் மீது கொண ட ஆசையின் காரணமாக திரையுலகில் நுழைந்து சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பின் காமெடியனாக உருமாறி சினிமாவில் பல திரைப்படஙகளில் பல முன்னனி நடிகர்களுடன்  நடித்துள்ளார்.

மேலும் சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட இவர் மக்களுக்கு நகைச்சுவையுடன் கூடிய பல நல்ல சிந்தனைகளை தனது நகைச்சுவையான வசனங்களின் மூலம் வெளிப்படுத்தி வந்தார். அய்யா அப்துல்கலாம் அவர்களின் தீவிர ரசிகனான விவேக் அவர்கள் அவரது கொள்கைகளை பின்பற்றுவதோடு செயல்படுத்தியும் வந்தார். மேலும் இதுவரை லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு அதை பராமரித்தும் வருகிறார். இவ்வாறு சினிமாவில் நகைச்சுவையால் மட்டுமின்றி சமூகத்தில் பல நல்ல செயல்களை செய்ததன் மூலம் மக்களிடையே பலத்த வரவேற்பையும் அவர்கள் மனதில் நீங்காத இடத்தைபிடித்த விவேக் அவர்களுக்கு எதிர்பாராத விதமாக நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டு மொத்த திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இவ்வாறு இருக்கையில் அவரது நெருங்கிய நண்பரும் பிரபல திரைப்பட. நகைச்சுவை நடிகரான வைகைபுயல் வடிவேலு அவர்கள் விவேக் அவர்களது பிரிவை தாங்கமுடியாமல் கமனவருத்தத்துடன் அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, என் நண்பன் விவேக் மாரடைப்பால் மறைந்துவிட்டான் என்று செய்திகளில் பார்த்து தெரிந்து கொண்டேன்.

அந்த செய்தியை பார்த்ததும் எனக்கு ரொம ப அதிர்ச்சியாகிவிட்டது.அதை பற்றி என்னால் பேசவே முடியவில்லை. அவன் இல்லை என்று நினைக்கும் போது என்னால் நம்பமுடியவில்லை மேலும் எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது. பிறருக்கு உதவும் உள்ளம் கொண்டவன் அவன். அப்துல்கலாம் அய்யா அவர்களுடன் நெருக்கமாக இருப்பான். மேலும் சமுதாயத்திற்காக விழிப்புணர்வு செய்வது ,மரம நடுவது போன்ற நல நல்ல விசயங்களை செய்வான். எனக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் இவனும் ஒருவன்.

நானும் அவனது நடிப்பிற்கு தீவிர ரசிகன்.பல படங்களில் நாங்கள் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளோம்.இந்த நிலையில் என்னால் அவனுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை. என் நெஞ்சார்ந்த இரங்கலை அவன் குடும்பத்திற்கு தெரிவித்து கொள்கிறேன் என கண்ணீர மல்க பேசியிருந்தார் வடிவேலு அவர்கள். நகைச்சுவை நடிகர் விவேக் அவர்களின் மறைவு திரையுலகினர் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் பெரும் துயரத்தை எற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here